
செய்திகள் மலேசியா
Era FM வானொலி நிர்வாகம், Maestra Broadcast-க்கு RM250,000 அபராதம்: எம்சிஎம்சி
கோலாலம்பூர்:
Era FM வானொலி நிலையத்தின் நிர்வாகம், Maestra Broadcastக்கு 250,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுவதாக மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் தைப்பூசத்திற்கு காவடி எடுப்பதை Era FM-இன் மூன்று அறிவிப்பாளர்கள் நடனமாடி கேலி செய்த காணொலி Era FM வானொலியின் சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அவர்களின் அச்செயலைக் கண்டித்து Maestra Broadcast-இன் உரிமத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக எம்சிஎம்சி கடந்த மார்ச் 7-ஆம் தேதி அறிவித்தது.
எம்சிஎம்சி இந்த அறிவிப்பை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று Maestra Broadcast கேட்டுக் கொண்டது.
Era FM வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர்கள் தங்களின் செயலுக்கு மன்னிப்பு தெரிவித்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்டு அபராதம் மட்டும் விதிக்கப்படும் என்று எம்சிஎம்சி தெரிவித்தது.
அதனால் அவர்களின் உரிமம் இனி ரத்துச் செய்யப்படாது என்றும் சமூக ஊடகத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதற்காக Maestra Broadcast-க்கு குற்றவியல் சட்டம் 1998 இன் பிரிவு 233-கீழ் அவர்களுக்கு 250,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதையும் எம்சிஎம்சி தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
Maestra Broadcast நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற வானொலி நிலையங்களான Melody, Mix FM ஆகியவற்றில் பணிப்புரியும் ஊழியர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 11:12 am
செக்கிஞ்சானை தாக்கிய இரண்டு நிமிட புயலில் 30 வீடுகள் சேதமடைந்தன
March 12, 2025, 11:10 am
இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலம் நாளை பதிவு செய்யப்படும்: அஸாம் பாக்கி
March 12, 2025, 11:08 am
3 ஏரா எஃப்எம் அறிவிப்பாளர்கள் மீது எம்சிஎம்சி மேலும் நடவடிக்கை எடுக்காது - ஃபஹ்மி
March 12, 2025, 11:07 am
இனவாத பதிவுகளை மீண்டும் பதிவேற்றியதற்காக ஜம்ரியை எம்சிஎம்சி விசாரிக்கிறது
March 12, 2025, 8:37 am
பங்கோர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மாசி மகத் திருவிழாவில் டத்தோஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார்
March 11, 2025, 5:20 pm
ரமலான் உதவிகள் வழங்குவதில் டெங்கில் வட்டார மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்: டத்தோ அப்துல் ஹமித்
March 11, 2025, 4:52 pm
தாமதம் ஏற்பட்டாலும் LCS திட்ட முன்னேற்றத்தில் அரசாங்கம் திருப்தி அடைகிறது: காலிட் நோர்டின்
March 11, 2025, 3:45 pm