நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் உதவிகள் வழங்குவதில் டெங்கில் வட்டார மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்: டத்தோ அப்துல் ஹமித்

டெங்கில்:

ரமலான் உதவிகள் வழங்குவதில் டெங்கில் வட்டார மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

எஹ்சான் வர்த்தக குழுமத்தின் தலைவர் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.

இறைவனின் அருளால் வர்த்தக ரீதியில் எஹ்சான் குழுமம் உயரிய நிலையை அடைந்துள்ளது.

இதன் அடிப்படையில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ரமலான் உதவிகளுக்கான எஹ்சான் ஒதுக்கி வருகிறது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு எஹ்சான் வர்த்தக குழுமத்தின் சார்பில் உதவிகள் வழங்கப்படுகிறது.

இவ்வாண்டு கிட்டத்தட்ட 3,500 பேருக்கு ரமலான் உதவிகளை வழங்க எஹ்சான் குழுமம் இலக்கு கொண்டுள்ளது.

இதில் டெங்கில் வட்டார மக்களை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன். இங்குள்ள மக்கள் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

அதனால் இங்குள்ள மக்களுக்கான என்னுடைய உதவிகள் தொடரும் என்று அவர் கூறினார்.

மலேசிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைவரும் சிப்பாங் வட்டார ஒருங்கிணைப்பாளர் டத்தோ இப்ராஹிம் ஷா, டெங்கில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சுலைமான் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் ரமலான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கிட்டத்தட்ட 250 பேருக்கு இன்று உதவிகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset