நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாமதம் ஏற்பட்டாலும் LCS திட்ட முன்னேற்றத்தில் அரசாங்கம் திருப்தி அடைகிறது: காலிட் நோர்டின் 

பெட்டாலிங் ஜெயா: 

ஐந்து லிட்டோரல் போர் கப்பல்களை உருவாக்கும்,  LCS திட்டத்தில் தாமதம் ஏற்பட்டாலும் அரசு அதன் திட்ட முன்னேற்றத்தில் திருப்தி அடைவதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்தார். 

ஐந்து கப்பல்களின் கட்டுமானப் பணிகள் 73% நிறைவடைந்துள்ளது.

அசல் உபகரண உற்பத்தியாளர் தொடர்பான சிக்கல்கள் காரணமாக 1.68% தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கலீத் கூறினார்.

முதல் LCS போர் கப்பல் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் அரச மலேசியக் கடற்படையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

மற்ற 4 போர் கப்பல்களின் கட்டுமானப் பணி செயல்பாட்டில் உள்ளன. 

RM9 பில்லியன் அசல் செலவில் LCS திட்டம் மலேசியாவின் வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல் என்று கூறப்படுகிறது.

தாமதங்கள் மற்றும் செலவு அதிகரிப்பு காரணமாக, திட்டச் செலவு RM11.22 பில்லியனாக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் வழங்கப்பட வேண்டிய கப்பல்களின் எண்ணிக்கை ஆறிலிருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத் திட்டத்தின் அடிப்படையில், முதல் கப்பல் 2019 இல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ், கப்பல்கள் ஆகஸ்ட் 2026, ஏப்ரல் 2027, டிசம்பர் 2027, ஆகஸ்ட் 2028 மற்றும் ஏப்ரல் 2029 இல் வழங்க திட்டமிடப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset