
செய்திகள் மலேசியா
முறையான உரிமம் பெறாமல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யும் வியட்நாமிய மருத்துவர் கைது
கோலாலம்பூர்:
இரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளைக் கிளினிக்காக மாற்றி அதில் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த ஒன்பது வியட்நாமினர்களை கோலாலம்பூர் குடிநுழைவு துறை கைது செய்துள்ளது.
டெசா பெட்டாலிங் மற்றும் புக்கிட் ஜலீலிலுள்ள இரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளைக் கிளினிக்காக மாற்றியுள்ளனர்.
கோலாலம்பூர் குடிநுழைவு துறை நடத்திய சோதனை நடவடிக்கையில் கிளினிக்கின் முகவர்கள் என சந்தேகிக்கப்படும் ஓர் உள்ளூர் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் Wan Mohamed Saupee Wan Yusoff தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட வியட்நாமியர்களில் ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஓர் உள்ளூர் ஆணும் பெண்ணும் கோலாலம்பூர் குடிவரவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.
கிளினிக்கில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் மொத்த கட்டணத்தில் 5 முதல் 10 சதவீதம் வரை கிளினிக்கின் முகவர்களாகச் செயல்படும் உள்ளூர்வாசிகளுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டதாக Wan Mohamed கூறினார்.
மூக்கு, கண் இமைகள் மற்றும் முக அழகுபடுத்துதல் போன்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சேவைகள் வழங்குவதும் கண்டறியப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 11:12 am
செக்கிஞ்சானை தாக்கிய இரண்டு நிமிட புயலில் 30 வீடுகள் சேதமடைந்தன
March 12, 2025, 11:10 am
இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலம் நாளை பதிவு செய்யப்படும்: அஸாம் பாக்கி
March 12, 2025, 11:08 am
3 ஏரா எஃப்எம் அறிவிப்பாளர்கள் மீது எம்சிஎம்சி மேலும் நடவடிக்கை எடுக்காது - ஃபஹ்மி
March 12, 2025, 11:07 am
இனவாத பதிவுகளை மீண்டும் பதிவேற்றியதற்காக ஜம்ரியை எம்சிஎம்சி விசாரிக்கிறது
March 12, 2025, 8:37 am
பங்கோர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மாசி மகத் திருவிழாவில் டத்தோஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார்
March 11, 2025, 5:20 pm
ரமலான் உதவிகள் வழங்குவதில் டெங்கில் வட்டார மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்: டத்தோ அப்துல் ஹமித்
March 11, 2025, 4:52 pm