நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

DAP கட்சி தேர்தலில் வாக்குகள் வாங்கப்படவில்லை: தேசிய DAP நிர்வாக செயலாளர் ஸ்டீவன் சிம் விளக்கம் 

ஷாஆலாம்: 

DAP கட்சி தேர்தலில் வாக்குகள் எதுவும் வாங்கப்படவில்லை என்று DAP கட்சியின் செயலாளர் ஸ்டீவன் சிம் விளக்கம் அளித்தார் 

DAP கட்சி தேர்தலைக் கண்காணிக்க இம்முறை ஓர் அனைத்துலக நிறுவனம் ஒன்று பணிக்கு அக்கட்சி அமர்த்தியுள்ளது 

இதனால் DAP கட்சி தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை இது உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார் 

இந்த மாதிரியான செயல்களில் எந்தவொரு DAP கட்சி பேராளர்களும் இருக்கமாட்டார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார் 

முன்னதாக, DAP கட்சித் தேர்தலில் வாக்குகளை வாங்க ஒரு குழு செயல்பட்டு வருவதாகவும் இதனை எம்.ஏ.சி.சி விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் DAP கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset