நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜம்ரி போன்ற குழப்பவாதிகளுக்கு தெளிவு கொடுப்பதே எனது நோக்கம்; மற்ற மதத்தை பற்றி விவாதிப்பது அல்ல: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

ஜம்ரி  வினோத் போன்ற குழப்பவாதிகளுக்கு தெளிவு கொடுப்பதே எனது நோக்கம். மற்ற மதத்தை பற்றி விவாதிப்பது அல்ல.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

காவடி ஏந்தும் இந்துக்கள் பேய் பிடித்தது போலவும் கள்ளு குடித்த நிலையில் நடனமாடும்போது வேல் வேல் என்று சொல்வார்கள் என்று ஜம்ரி வினோத் சாடியிருந்தார்.

இதன் மூலம் அவர் நேரடியாக இந்துக்களை அவமதித்துள்ளார். மேலும் அவரின் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறப்பானதாகும்.

இதனால் சமூக மக்கள் கொதிப்படைந்ததுடன் அவருக்கு எதிராக போலிஸ் புகார் செய்யபட்டு வருகிறது.

மேலும் நானும் விவாதத்திற்கு வர சொல்லி அறைகூவல் விடுத்தேன். ஆனால் இந்த விஷயத்தை ஒரு சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

இந்து மதத்தை இழிவுப்படுத்திய ஜம்ரி வினோத் போன்ற குழப்பவாதிகளின் குழப்பத்தை தெளிய வைக்க வேண்டும் என்பது தான் இந்த விவாதத்தின் முக்கிய நோக்கமாகும்.

மாறாக மற்ற மதத்தை பற்றி பேசுவது எனது நோக்கம் அல்ல. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

ஜம்ரி வினோத் மீது போலிஸ் புகார் செய்யப்பட்டாலும் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது அனைவருக்கும் ஏமாற்றமாக உள்ளது.

ஆகையால் இவ்விவகாரத்தில் இந்திய மக்கள், சமூக ஊடகங்களில் கோபத்தை காட்டாமல், நாடு முழுவதும் அவருக்கு எதிராக போலிஸ் புகார் செய்ய வேண்டும்.

30,000, 40,000 புகார்கள் செய்த பின் போலிஸ் என்ன செய்கிறது என்பதை பார்ப்போம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset