நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பூலோவில் ரமலான் மாதம் முழுவதும் 6,000 நோன்பு கஞ்சி பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் ரமலான் மாதம் முழுவதும் 6,000 நோன்பு கஞ்சி பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

அத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.

கோத்தா டாமன்சாரா செக்‌ஷன் 4, சுங்கைபூலோ கம்போங் மெலாயுவில் அமைக்கப்பட்டுள்ள ரமலான் சந்தைக்கு சென்றேன்.

அங்குள்ள வர்த்தகர்கள், மக்களை சந்தித்ததுடன் 1,200 நோன்பு கஞ்சி பாக்கெட்டுகளும் வழங்கினேன்.

இதே போன்று சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் ரமலான் மாதம் முழுவதும் மொத்தம் 6,000 நோன்பு  கஞ்சி பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

இந்தப் புனித மாதத்தில் பரவும் நல்லெண்ண உணர்வையும் அனுபவிப்பதோடு, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கிறது.

மேலும் இந்த ஆண்டு ரமலான் சந்தை கலகலப்பாகவும் உற்சாகமாகவும் உள்ளது.

பல்வேறு வகையான சுவையான உள்ளூர் உணவுகள் சுவையை தந்தது மகிழ்வித்தது மட்டுமல்லாமல், 

பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த சமூகங்களுக்கிடையில் நெருக்கமான உறவுகளையும் கொண்டு வருகிறது.

குறிப்பாக நோன்பு கஞ்சி வழங்குவதுடன் ரமலான் சந்தை சமூகத்திற்குள் நட்பை வலுப்படுத்தும் ஒரு தளமாக அமைகிறது.

அதே நேரத்தில் இங்குள்ள அனைவருக்கும் ஒரு சிறிய உற்சாகத்தை அளிக்கிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset