நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் மெர்தாஜாமில் போலீசாரின் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார்

புக்கிட் மெர்தாஜாம்:

மாசாங் புபோக் பகுதியில் போலீசாரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட நபர், 30 வயது மதிக்கத்தக்கவர் என்றும் வெளிநாட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை பினாங்கு மாநில காவல் துறைத் ஆணையர் (CPO) டத்தோ ஹம்சா அகமட்  உறுதிப்படுத்தியுள்ளார்.

புக்கிட் மெர்தாஜாம் ஜாலான் காஜா மத்தி பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணியளவில், கொல்லப்பட்ட சந்தேகநபர் சந்தேகத்திற்கு வழிவகுக்கும் வகையில் நடந்து கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

“அடையாள அட்டையை வழங்குமாறு கேட்டபோது, அவர் மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடினார்,” என்று ஹம்சா கூறினார்.

போலீசார் பின்தொடர்ந்தபோது, சந்தேகநபர் போலீசாரை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

“எங்கள் குழுவினர் தங்களை பாதுகாக்கும் நோக்கில் எதிர்வினையாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அந்த நபர் உயிரிழந்தார்,” என அவர் கூறினார்.

இச்சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து ஒரு Glock துப்பாக்கி, ஹெரோயின் (heroin) பறிமுதல் செய்யப்பட்டது.

தண்டனைச் சட்டம் (Penal Code) பிரிவு 307 – கொலை முயற்சி, 1971 தீவிர தண்டனை ஆயுதச் சட்டம் (Firearms (Increased Penalties) Act 1971) பிரிவு 8, 1960 ஆயுதச்சட்டம் (Arms Act 1960) பிரிவு 8(a), 1952 ஆபத்தான போதைப்பொருள் சட்டம் (Dangerous Drugs Act 1952) பிரிவு 39B – போதைப்பொருள் கடத்தல் இந்த வழக்கு,  ஆகிய  சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக பினாங்கு போலீஸ் தெரிவித்துள்ளது.

-தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset