நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரிய ஆலங்கட்டி மழையால் சிலாங்கூர் மக்கள் அதிர்ச்சி

ஷாஆலம்:

சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த மார்ச் 9ஆம் தேதி திடீரென ஆலங்கட்டி மழை பெய்தபோது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த வழக்கத்திற்கு மாறான வானிலை அன்றைய தினம் மாலை சுமார் 4 மணியளவில் நடந்தது.

வெப்ப மண்டலப் பகுதிகளில் ஆலங்கட்டி நிகழ்வது அரிதான நிகழ்வாகும்.

இந்நிலையில், இதுவரை அதிகம் கண்டிராத தருணத்தை சிலாங்கூர் மக்கள் பலரும் காணொளியும் படமும் எடுத்து தங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து வருவதாக ஊடகம் தெரிவித்தது.

முதல் முறையாக நேரடியாக இதைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  இன்று குளிர்கால உடைகளை அணிந்து கொள்ளலாம் என்று காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்த ஒருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கட்டிகள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட கட்டைவிரல் அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset