நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உயிரற்ற பாம்பை ஸ்கிபிங் கயிற்றாகப் பயன்படுத்தி விளையாடிய சிறுவர்கள் 

வூராபிண்டா:

ஆஸ்திரேலியா Woorabinda-வில் சிறுவர்கள் உயிரற்ற பாம்பை ஸ்கிபிங் கயிற்றாகப் பயன்படுத்தி விளையாடும் காணொலி சமூக ஊடகத்தில் வைரலானது.   

அக்காணொலியில் சிறுவர்கள் இறந்த பாம்பைப்  ஸ்கிபிங் கயிற்றாகப் பயன்படுத்தி விளையாடிச் சிரிக்கின்றனர். 

அதே நேரத்தில் ஒரு பெரியவர் அவர்களைக் கேள்வி கேட்பதும் அக்காணொலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிறுவர்கள் பாம்பை ஸ்கிப் கயிறாகப் பயன்படுத்துவதற்கு முன் அப்பாம்பு இறந்துவிட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

இந்நிலையில் சுற்றுச்சூழல், சுற்றுலா, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புத் துறை இந்தச் செயலுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தரப்பு விசாரணை நடத்தப்படுவதாக அத்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset