நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரமலான் முழுவதும் துபாய் மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்கும் RTA

துபாய்:

துபாயின் சாலைகள், போக்குவரத்து ஆணையம் (RTA) ரமலான் மாதத்தின் போது மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ நிலையங்களில் ரமலான் 24 ஆம் தேதி வரை இலவச இஃப்தார் உணவு விநியோகிக்கப்படும் என்றும், ‘noon Food’ நிறுவனத்துடனான கூட்டாண்மை மூலம் இந்த முயற்சி சாத்தியமானது என்றும் தெரிவித்துள்ளது.

மெட்ரோ பயணிகள் மற்றும் பஸ் டிரைவர்கள், டெலிவரி ரைடர்ஸ், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட தேவைப்படுபவர்களுக்கு இலவச உணவை வழங்குவதன் மூலம் ரமலான் மாதத்தில் அருளையும் ஒற்றுமையையும் பரப்புவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

Get free Iftar in Dubai with RTA's 'Meals on Wheels

இதற்கு மேலதிகமாக, மெட்ரோ நிலையங்கள், அவற்றின் தலைமையகம் மற்றும் கடல் போக்குவரத்து மையங்கள் போன்ற முக்கிய இடங்களில் 20 சமூக நிகழ்வுகள் மற்றும் தொண்டு நடவடிக்கைகளையும் RTA நடத்துவதாகக் கூறப்படுகின்றது.

இதே போல பல தொண்டு நிறுவனங்களும் உணவகங்களும் ரமலான் மாதத்தில் இலவச இஃப்தார் உணவுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆதாரம்: Khaleej  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset