நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஶ்ரீ சரவணன் - ஜம்ரி இடையிலான விவாதம் தொடரக்கூடாது:  ஒருமைப்பாட்டு அமைச்சர்

புத்ராஜெயா:

மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணனுக்கும் சமய போதகர் ஜம்ரி வினோத்துக்கும் இடையே திட்டமிடப்பட்டுள்ள விவாதம் தொடரக்கூடாது.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை  அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் இதனை வலியுறுத்தினார்.

மத வேறுபாடுகளில் அதிக கவனம் செலுத்தும் விவாதங்கள் மலேசியாவில் உள்ள பல மத சமூகங்களுக்கு இடையே பதற்றத்தைத் தூண்டும்.

குறிப்பாக உறவுகளைச் சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

எனவே, வேறுபாடுகளைக் கண்டறிந்து ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளைப் புறக்கணிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டால்,

மதம் தொடர்பான விவாதங்கள் தொடரக்கூடாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

மதம் பற்றிய விவாதங்கள் நமது சமூகத்தில் உள்ள பன்முகத்தன்மை குறித்த முழு மரியாதையுடனும் விழிப்புணர்வுடனும் நடத்தப்பட வேண்டும்.

எங்களுக்கு பல்வேறு மதங்கள், நம்பிக்கைகள் இருந்தாலும் மலேசியர்களாக நம்மை ஒன்றிணைக்கக்கூடிய பொதுவான அடிப்படை  உலகளாவிய மதிப்புகளில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்று அவர் ஒரு ஊடக அறிக்கையில் கூறினார்.

முன்னதாக, தைப்பூச கொண்டாட்டங்களின் போது காவடி ஏந்தியவர்களை பேய் பிடித்தவர்கள் அல்லது குடிபோதையில் இருந்தவர்களுடன் ஒப்பிட்டு ஜம்ரி கூறிய சர்ச்சைக்குரிய அறிக்கையைத் தொடர்ந்து,

மார்ச் 23 ஆம் தேதி ஜம்ரியுடன் விவாதம் நடத்த டத்தோஶ்ரீ சரவணன் திட்டமிட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset