செய்திகள் மலேசியா
சிந்தனைத் திறனைச் சிதைக்கும் சாட் ஜீபிடி : 2025 எஸ்.பி.எம் தேர்வில் மலாய் மொழி சரிவு
கோலாலம்பூர்:
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், குறிப்பாக சாட் ஜீபிடியைச் சார்ந்திருப்பது, மேலும் தற்போது மாணவர்களிடையே முக்கிய தகவல் தொடர்பு ஊடகமாக மாறிவிட்ட ஆங்கிலத்தின் சவாலும், 2025 எஸ்.பி.எம் தேர்வில் மலாய் மொழி பாட செயல்திறன் குறைவதற்கான காரணிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
2025 எஸ்.பி.எம் முடிவுகள் பகுப்பாய்வின்படி, மலாய் மொழி 95 பாடங்களில் 29-ன் ஒரு பகுதியாக சராசரி பாட தரம் (GPMP) குறைவைப் பதிவு செய்தது.
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் (UKM) கல்வி புலத்தின் பேராசிரியர் டாக்டர் முஹம்மத் மஹ்ஸான் அவாங், இந்த ஆண்டு எஸ்.பி.எம் மாணவர்கள் வளர்ந்த டிஜிட்டல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றும் இது மலாய் மொழி தேர்ச்சியைப் பாதித்துள்ளது என்றும் கூறினார்.
"2025 எஸ்.பி.எம் தலைமுறையினர் பிறந்தது முதல் இணையத்திற்கு வெளிப்படுத்தப்பட்டனர், அவர்களின் முதல் ஊடகம் பெரும்பாலான செயலிகள், விளையாட்டுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆங்கிலமாகவே இருந்தது.
"கோவிட் 19-ன் போது வீட்டிலிருந்து கற்றல் காலத்தில் உட்பட இந்தக் குழந்தைகள் இணைய சமூகத்தில் வளர்ந்தனர், இணையத்தைத் தங்கள் முக்கிய ஊடகமாக மாற்றிக்கொண்டனர். மலாய் மொழி தேர்ச்சியில் இது முக்கிய சவால்களில் ஒன்றாகும்" என்று அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவின் விரிவான பயன்பாடு மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் பாதிக்கிறது என்று பேராசிரியர் டாக்டர் முஹம்மத் மஹ்ஸான் மேலும் வலியுறுத்தினார்.
"எஸ்.பி.எம் தேர்வின் கட்டமைப்பு எழுதும் திறன், சிந்திக்கும் திறனைச் சோதிக்கிறது.
இருப்பினும் செட்ஜிப்பிட்டியோடு, மாணவர்கள் சிந்தனையை முழுமையாக செயல்படுத்தாமலேயே எளிதாக கட்டுரைகளைப் பெற முடிகிறது" என்று அவர் கூறினார்.
டிஜிட்டல் தலைமுறையின் தேவைகளுக்கு ஏற்ப கற்றல் கற்பித்தல் முறைகளை மறுமதிப்பீடு செய்யுமாறு கல்வி அமைச்சகத்தை (KPM) அவர் பரிந்துரைத்தார்.
தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து மாணவர்களின் திறனை வலியுறுத்தும் மாணவர் மையத்தத்துவ மூலோபாயமான ஹியுட்டகோஜி கற்றல் உட்பட பல அணுகுமுறைகளை அவர் பரிந்துரைத்தார்.
இதற்கிடையே, மலாயா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துணை டீன் இணை பேராசிரியர் டாக்டர் ஜுவாத்தி ஹாசிம், மலாய் மொழி செயல்திறன் குறைவு அடிப்படை மொழி திறன்களின் நிலையற்ற தேர்ச்சி, அன்றாட தகவல் தொடர்பில் கலப்பு மொழியின் செல்வாக்கு, தரமான வாசிப்பு பொருட்களுக்குப் போதுமான வெளிப்பாட்டின்மை ஆகிய பல காரணிகளிலிருந்து வருவதாக கூறினார்.
"மொழி கல்வியறிவைத் தொடக்கப் பள்ளியிலிருந்தே உறுதியாக கட்டியெழுப்ப வேண்டும், ஏனென்றால் ஆரம்பத்தில் ஏற்படும் பலவீனங்கள் மேல்நிலை பள்ளி நிலையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.
"மலாய் மொழி கற்பித்தல் முறைகளை வலுப்படுத்துதல், எழுதுதல், உரைகளை புரிந்துகொள்வதில் குறிப்பிட்ட பயிற்சி, வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பது உட்பட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோரின் தொடர்ச்சியான ஆதரவும் முக்கியம்" என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 1:41 pm
உணவுப் பொருட்களின் சரக்கு போதுமானதாக உள்ளது; விலை உயராது: அமைச்சர்
April 4, 2026, 1:40 pm
எரிசக்தி நெருக்கடி; கல்விப் பிரச்சினை தொடர்ந்து முன்னுரிமை பெறுகிறது: பிரதமர்
April 4, 2026, 12:30 pm
எனக்கு எந்த வருத்தமும் இல்லை: காஜாங் நகர்வை தற்காத்தார் ரபிசி
April 4, 2026, 12:29 pm
ஏழ்மையை பொருட்படுத்தாமல் ஜோஅன்னா ஜெபமலர் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்று சாதனை
April 4, 2026, 12:26 pm
கோத்தா பாருவில் எட்டு வீடுகள் எரிந்தன
April 4, 2026, 12:11 pm
