நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மறைந்த துன் லிங் லியோங் சிக் பெரும் உறுதிப்பாடு கொண்ட ஒரு அரசியல்வாதி: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்

கோலாலம்பூர்:

மறைந்த துன் லிங் லியோங் சிக் பெரும் உறுதிப்பாடு கொண்ட ஒரு அரசியல்வாதி ஆவார்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் இதனை கூறினார்.

முன்னாள் மசீச தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான துன் டாக்டர் லிங் லியோங் சிக் தனது 82-வது வயதில் காலமானார்.

இதை தொடந்து தனது ஆழ்ந்த இரங்கலை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் வெளியிடப்பட்ட ஒரு உருக்கமான அஞ்சலியில், விக்னேஸ்வரன் மறைந்த லிங்கை, "பெரும் உறுதிப்பாடு கொண்ட ஒரு அரசியல்வாதி" என்றும்,

அவரது வாழ்க்கை பொதுக் கடமை, தேசிய சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வரையறுக்கப்பட்டது என்றும் விவரித்தார்.

குறிப்பாக போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், மலேசியாவின் அரசியல், பொருளாதாரத் தளத்திற்கு லிங் ஆற்றிய விரிவான பங்களிப்புகளை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் எடுத்துரைத்தார்.

அவரது மறைவு நாட்டிற்கு ஒரு பெரும் இழப்பாகும்.

நாட்டின் அரசியல் தளத்திற்கும் தேசிய வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் ஆழமாகப் போற்றப்பட்டு நினைவுகூரப்படும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset