நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் கட்சியை விட்டு வெளியேறினால், அது கெஅடிலானுக்கு தான் ஆபத்தாக முடியும்: ரபிசி

கோலாலம்பூர்:

நான் கட்சியை விட்டு வெளியேறினால், அது கெஅடிலானுக்கு தான் மேலும் ஆபத்தாக முடியும்.

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.

கட்சியை விட்டு வெளியேறும் அழைப்பை ஏற்றுக் கொண்டால், அந்த நடவடிக்கை கெஅடிலான் கட்சிக்கு மேலும் ஆபத்தானதாக அமையும்.

நாம் கட்சியை விட்டு வெளியேறினால், அமைதியாக இருக்க மாட்டேன்.

மாறாக சுதந்திரமாக இன்னும் உரக்கப் பேசுவேன்.

இந்த வேண்டுகோளின் அடிப்படை என்னவென்றால், நான் கட்சியை விட்டு வெளியேறினால், நான் அமைதியாக இருப்பேன் என்பதுதான் அடிப்படை காரணம்.

ஆனால் நிலைமை அப்படி அல்ல.

நான் எங்கிருந்தாலும் கட்சியை விட்டு வெளியேறினாலும், நான் இன்னும் உரக்கப் பேசுவேன்,

நான் இன்னும் சுதந்திரமாக இருப்பேன். நான் கெஅடிலானுக்கு  இன்னும் ஆபத்தானவனாக இருப்பேன்.

இன்று கோலாலம்பூரில் உள்ள பாண்டன் நாடாளுமன்றத்தின் பெருநாள் கொண்டாட்டத்தில் ஊடகங்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset