செய்திகள் மலேசியா
விபத்தில் மரணமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்: சரஸ்வதி
சிகாமட்:
விபத்தில் மரணமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு
உரிய நீதி கிடைக்க வேண்டும்.
கெமேலே சட்டமன்ற உறுப்பினரும் மஇகா மகளிர் பிரிவுத் தலைவருமான சரஸ்வதி இதனை வலியுறுத்தினார்.
கெமாஸ் பாருவில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரு தம்பதியினர் உட்பட மூன்று பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்த்தில் மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் மிகவும் மனதைத் தொடுவதாகவும், ஒட்டுமொத்த சமூகத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் உள்ளது.
மிகுந்த வருத்தத்துடன் சிகாமட் கெமாஸ் பாரு, தாமான் கோல்டன் ஹில்லில் உள்ள மறைந்த கே. மாயகிருஷ்ணன், எஸ். செவண்டாய் ஆகியோரின் இல்லத்திற்கு அவர்களின் குடும்பத்தினரை நான் சென்று சந்தித்தேன்.
அன்புக்குரியவர்களின் மறைவின்போது, அக்குடும்பத்தின் வாரிசுகளுக்கு எனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்க இங்கு வந்துள்ளேன்.
இந்த இழப்பு நிச்சயமாக ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
மேலும் இந்தக் கடினமான நேரத்தை எதிர்கொள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் வலிமையும் மன உறுதியும் கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
குறிப்பாக இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கடும் நடவடிக்கைகள் தான் இறந்தவர்களுக்கு கிடைக்கும் நீதி என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 11:51 pm
நான் கட்சியை விட்டு வெளியேறினால், அது கெஅடிலானுக்கு தான் ஆபத்தாக முடியும்: ரபிசி
April 4, 2026, 11:47 pm
மதுபோதை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது: கணபதி ராவ்
April 4, 2026, 3:15 pm
சிந்தனைத் திறனைச் சிதைக்கும் சாட் ஜீபிடி : 2025 எஸ்.பி.எம் தேர்வில் மலாய் மொழி சரிவு
April 4, 2026, 1:41 pm
உணவுப் பொருட்களின் சரக்கு போதுமானதாக உள்ளது; விலை உயராது: அமைச்சர்
April 4, 2026, 1:40 pm
