நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிசக்தி நெருக்கடி; கல்விப் பிரச்சினை தொடர்ந்து முன்னுரிமை பெறுகிறது: பிரதமர்

கோல கங்சார்:

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து உலகம் தற்போது நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டிருந்தாலும், கல்வி தொடர்பான விவகாரங்கள் அரசின் முன்னுரிமைகளில் தொடர்ந்து இடம் பெறும்.

வருங்கால சந்ததியினருக்கான கல்வியின் தரம் பாதிக்கப்படாமல் இருப்பதை இது உறுதி செய்யும்  என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நீண்ட காலம் தேவைப்படும் பெரிய திட்டங்களைத் தவிர, கல்வி வசதித் திட்டங்கள் தாமதமின்றி உடனடியாக அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதே அரசின் நிலைப்பாடு.

ஆனால் சிறிய திட்டங்களுக்கு, குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் உள்ள திட்டங்களுக்கு, தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்.

அண்டை நாடுகள் வட்டாரங்களுடனான மோதல்கள், பகைமைகளின் காரணமாக, பல நாடுகள் பாதுகாப்புக்காக அதிக நிதியைச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

எனவே, கல்விக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் பின்தங்கியுள்ளது.

கல்வியின் தரமும் வசதிகளும் மிகவும் மோசமாக இருந்தால், அடுத்த தலைமுறை நிச்சயமாகப் பாதிக்கப்படும்.

கோல காங்சாரில் இடைநிலைப் பள்ளியின் குடியிருப்பாளர்கள் முன்னாள் மாணவர்களுடன் நடைபெற்ற ஒரு நட்பு அமர்வில் கலந்துகொண்டபோது பிரதமர் தனது உரையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset