செய்திகள் மலேசியா
மதுபோதை, போதைப் பொருட்களால் ஏற்படும் விபத்துகள்; அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கின்றன: யுனேஸ்வரன்
சிகாமட்:
மதுபோதை, போதைப் பொருட்களால் ஏற்படும் விபத்துகள் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கின்றன.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் இதனை கூறினார்.
நேற்று மறைந்த அமிருல் ஹபிஸ் ஒமாரின் குடும்பத்தாரை சந்திக்க கிள்ளானுக்கு சென்றேன்.
இன்று, சிகாமட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உயிரைப் பறித்த மற்றொரு விபத்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தேன்.
இவ்விபத்தில் தாத்தா, பாட்டி, மாமா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்தனர்.
இது அவர்களை விட்டுப் பிரிந்த குடும்பங்களில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிகாமட் மருத்துவமனையில் மற்றொரு பாதிக்கப்பட்டவரான த கார்த்திக்கைச் சந்தித்துப் பேசினேன்.
இந்த துயரச் சம்பவத்தில், அவர் தனது தந்தை, தாய், மாமாவை இழந்துள்ளார்.
அவர் அனுபவித்த துயரத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இன்னும் நெஞ்சை உலுக்கும் விதமாக, கார்த்திக்கின் இரண்டு பிள்ளைகளும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தனர்.
அவரது மூத்த மகன்.23 வயதான ஹரிஹரனுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதே சமயம் அவரது இளைய மகள் 19 வயதான சுகன்யா, கடுமையான மூளைக் காயம் காரணமாக தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுகன்யா சில நாட்களுக்கு முன்புதான் தனது எஸ்பிஎம் தேர்வு முடிவுகளைப் பெற்றிருந்தார்.
ஆனால் இப்போது அவர் மருத்துவமனையில் உயிருக்காகப் போராட வேண்டியுள்ளது.
இந்தத் துயரம் வெறும் விதியால் நிகழ்ந்தது அல்ல.
மாறாக போதைப்பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் ஓட்டுநரின் அலட்சியத்தின் விளைவு.
இந்தப் பொறுப்பற்ற செயல் அப்பாவி மக்களின் உயிரைப் பறித்து, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை அழித்துவிட்டது. நான் அமைதியாக இருக்க மாட்டேன்.
கண்டிப்பாக பாதிப்பக்கப்பட்டவர்களுக்கு நீதியும் காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கவும் குரல் கொடுப்பேன் என்று யுனேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 11:51 pm
நான் கட்சியை விட்டு வெளியேறினால், அது கெஅடிலானுக்கு தான் ஆபத்தாக முடியும்: ரபிசி
April 4, 2026, 11:50 pm
விபத்தில் மரணமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்: சரஸ்வதி
April 4, 2026, 11:47 pm
மதுபோதை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது: கணபதி ராவ்
April 4, 2026, 3:15 pm
சிந்தனைத் திறனைச் சிதைக்கும் சாட் ஜீபிடி : 2025 எஸ்.பி.எம் தேர்வில் மலாய் மொழி சரிவு
April 4, 2026, 1:41 pm
உணவுப் பொருட்களின் சரக்கு போதுமானதாக உள்ளது; விலை உயராது: அமைச்சர்
April 4, 2026, 1:40 pm
