நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்து சங்கத்தின் 60ஆம் ஆண்டு வைர விழா; மலேசிய இந்துக்களிடம் சாதி வேற்றுமை கலாச்சாரத்தை திணிக்க வேண்டாம்: தங்க கணேசன்

கோலாலம்பூர்:

மலேசிய இந்துக்களிடம் சாதி வேற்றுமை கலாச்சாரத்தை திணிக்க வேண்டாம் என்றம லேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் எச்சரித்தார்.

மலேசிய இந்து சங்கத்தின் 60ஆம் ஆண்டு வைர விழா பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த 60 ஆண்டுகளில் மலேசிய இந்துக்களின் உரிமைகளை காக்க இந்து சங்கம் தொடர்ந்த் குரல் கொடுத்து வருகிறது.

இந்துகள் தொடர்பான ஒவ்வொரு பிரச்சினைக்கும் நாங்கள் போராடி வருகிறோம்.

இப்போது கூட ஆலயங்கள் தொடர்பான சர்ச்சைகள் நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என பல்வேறு நடவடிக்கைகளை இந்து சங்கம் மேற்கொண்டு வருகிறது.

இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

அவ்வகையில் இன்றைய விழா மலேசிய இந்து சங்க பயணத்தில் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது என்று தங்க கணேசன் கூறினார்.

இதனிடையே இந்தியாவில் பரவலாக உள்ள சாதி கலாச்சாரம் மலேசிய இந்துக்களிடம் திணிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

மலேசியாவில் தமிழர், மலையாளம், தெலுக்கு என இருந்தாலும் நாங்கள் எல்லாம் இந்துக்கள் என ஒற்றுமையாக உள்ளோம்.

ஆக சாதி வேற்றுமை கலாச்சாரத்தை திணிக்க வேண்டாம். அது எங்களுக்கு தேவை இல்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset