நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதுபோதை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது: கணபதி ராவ்

கிள்ளான்:

மதுபோதை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராவ் இதனை கூறினார்.

குடிபோதை, போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராகக் கடுமையான அமலாக்கத்தையும், கடுமையான தண்டனைகளையும் விதிக்க வேண்டும்.

இத்தகைய நடத்தை பொதுப் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது.

இன்று காலை, காலஞ்சென்ற அமிருல் ஹபிஸ் ஒமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவரது மனைவியான நோர் நடியா, அவர்களது பிள்ளைகளுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவருடன், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு, சிலாங்கூரில் உள்ள பிரதமர் துறையின் செயலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவின் பிரதிநிதி, அவரது சிறப்பு அதிகாரி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, ​​பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் சுமையைக் குறைக்க உதவும் வகையில் கணபதிராவ் நிதியுதவி வழங்கினார்.

மேலும், இதே போன்ற ஆதரவை வழங்கிய ஐசியூ ஜேபிஎம், பாப்பாராயுடு அலுவலகத்திற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தை மற்றுமொரு சோகமான நினைவூட்டல் என்று விவரித்த அவர்,

பொறுப்பற்ற மற்றும் போதையில் வாகனம் ஓட்டும் குற்றவாளிகளுக்கு எதிராக மலேசியா உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset