நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான பயணத்தை ஜாலன் மஸ்ஜித் இந்தியா சதுரங்கப் போட்டி உருவாக்கியுள்ளது: டத்தோ வீரா ஷாகுல்

கோலாலம்பூர்:

கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான பயணத்தை ஜாலன் மஸ்ஜித் இந்தியா சதுரங்கப் போட்டி உருவாக்கியுள்ளது.

முக்மின் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.

மஸ்ஜித் இந்தியா பொது, டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கிண்ண சதுரங்கப் போட்டி மஸ்ஜித் இந்தியாவில் நடைபெற்றது.

8 வயது, 12 வயது, 18 வயது ஆகிய பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது.

200க்கும் மேற்பட்ட இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டு சாதித்தனர்.

இப்போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஹமீத் மஜித் (DATCC), அப்துல்லாஹ் ஹிடாயாத் (ஃபைகஸ் எண்டர்பிரைஸ்), ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ சிராஜுடின், ஏற்பாட்டுக் குழுவினர், நடுவர்கள், பெற்றோர்கள் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நமது இளைஞர்களிடையே வியூகச் சிந்தனை, ஒழுக்கம், மனவுறுதியை வளர்ப்பதில் சதுரங்க விளையாட்டு ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.

இவை எதிர்காலத் தலைவர்களுக்கு தேவையான அவசியமான குணங்களாகும்.

இந்த இளம் உள்ளங்களில் சிலருக்கு, கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான பயணம் இன்று தொடங்கியுள்ளது.

சதுரங்கம் என்பது வெறும் ஒரு விளையாட்டு மட்டுமல்ல. அது இளம் உள்ளங்களை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.

சதுரங்கத்தின் மூலம், நம் குழந்தைகள் விமர்சன ரீதியாகவும் வியூக ரீதியாகவும் சிந்திக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.

இது அவர்களுக்கு எப்படி வெற்றி பெறுவது என்பதை மட்டுமல்ல.

எப்படி சிந்திப்பது, சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது, வளர்வது என்பதையும் கற்றுக் கொடுக்கிறது என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்.

முன்னதாக ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset