நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லண்டன், நியூயார்க் போன்ற உலக நகரங்களைப் போல் சிங்கப்பூர் வளர வேண்டுமென்றால் புதியவர்கள் சிங்கப்பூரில் குடியேற வேண்டும்: முன்னாள் பிரதமர் லீ

சிங்கப்பூர்:

முன்னாள் சிங்கப்பூர் பிரதமரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங் (Lee Hsien Loong) புதியவர்கள் சிங்கப்பூரில் குடியேறுவது புதிய வாய்ப்புகளையும் புதிய சிந்தனைகளையும் கொண்டுவரும் என்று கூறியிருக்கிறார்.

சிங்கப்பூர் தன்னை மூடிக்கொண்டால் நல்ல வாய்ப்புகள் நழுவிப் போய்விடும் என்று அவர் சொன்னார்.

புதியவர்கள் குடியேறுவது சிங்கப்பூரின் உயிர்வாழ்வுக்கு அத்தியாவசியமானது என்றார் அவர்.

நன்யாங் தொழிற்கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற டெக் கீ (Teck Ghee) குடியிருப்பாளர்கள் நிகழ்ச்சியில் திரு லீ பேசினார்.

பொருளாதாரம் வளர்ச்சி பெறவேண்டுமானால் புதியவர்கள் தேவை என்றார் அவர்.

புதியவர்களோடு எண்ணிக்கை மட்டும் வளர்வதில்லை புதிய சிந்தனைகளும் வளர்கின்றன என்று மூத்த அமைச்சர் லீ சொன்னார்.

லண்டன், நியூயார்க், ஷங்ஹாய் போன்ற உலக நகரங்கள் அப்படித்தான் வளர்ந்திருக்கின்றன. சிங்கப்பூர் ஒதுங்கி நின்றால் அது பின்னடைந்துவிடும்.

பெரிய நாடுகளுக்கு இயற்கை வளங்கள் உள்ளன. சிங்கப்பூருக்கு மக்கள் வளமே உள்ளது என்று முன்னாள் பிரதமர் லீ கூறினார்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset