நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குவைத் விமான நிலையம் திடீரென மூடப்பட்டது

குவைத்:

குவைத் விமான நிலையம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று தற்காலிகமாக மூடப்பட்டதால், அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.  

குவைத் விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்ட உள்வரும் விமானங்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக அண்டை விமான நிலையங்களுக்கு (சவுதி அரேபியாவுக்கு) திருப்பி விடப்பட்டன.  

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்து விமான நிலையம் மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவை (எப்போது இயக்கத்துக்கு வரும் என்பதை) அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. மேலும் பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு மறுதிட்டமிடுதல், மாற்று ஏற்பாடுகள் பற்றிய அறிவிப்புகளை சரிபார்க்க அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த சில நாள்களாக அந்நாட்டில் கன மழை பெய்து வரும் நிலையில், தொழில்நுட்பக் கோளாரினால் விமான சேவை பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset