நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலியாவில் கடும் புயல்: 250,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் இல்லை

பிரிஸ்பேன்:

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்பேனுக்கு அருகே Moreton தீவைத் தாக்கிய Alfred சூறாவளி வெப்ப மண்டலப் புயலாய் மாறியிருக்கிறது.

கனத்த மழை, திடீர் வெள்ள அபாயம் தொடர்கிறது.

வெள்ளப் பாதிப்பு சாத்தியமுள்ள பிரிஸ்பேனிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். 50 ஆண்டுகளில் அங்கு இவ்வளவு வலுவான சூறாவளி வீசியதில்லை.

குவீன்ஸ்லந்தில் 250,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் இல்லை. பத்தாண்டுகளில் இப்படியொரு நிலை ஏற்பட்டதில்லை. நியூ சவுத் வேல்ஸில் 39,000 வீடுகள் இருளில் மூழ்கின.

சில விமான நிலையங்களின் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி ஏப்ரலில் தேர்தல் நடத்த அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, மீட்புப் பணிகளில் அவர் கவனம் செலுத்துகிறார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset