
செய்திகள் உலகம்
பறக்கும் விமானத்தில் நிர்வாணமாக ஓடிய இளம் பெண்: சக பயணிகள் அதிர்ச்சி
வாஷிங்டன்:
பறக்கும் விமானத்தில் திடீரென ஒரு இளம் பெண் நிர்வாணமாக விமானத்தின் குறுக்கும் எடுக்கும் ஓடிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் பீனிக்ஸ் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில், ஒரு பெண் பயணி விமானத்தின் கேபின் அருகே சென்று, நான் உடனே இறங்க வேண்டும் என்று கூறினார்.
விமான ஊழியர்கள், விமானம் 30,000 அடி உயரத்தில் பறக்கும் போது எப்படி இறங்க முடியும்? என்று மறுப்பு தெரிவித்தனர்.
உடனே, அந்த பெண் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தனது உடலில் அணிந்திருந்த அனைத்து ஆடைகளையும் கழட்டிவிட்டு நிர்வாண நிலையில் சத்தமாக இங்கும் அங்கும் ஓடி விடத் தொடங்கினார்.
அந்த பெண்ணின் செயல் விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர் விமானத்தில் நிர்வாணமாகவே ஓடி கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு கட்டத்தில், விமானியின் அறைக்கதவை உடைக்க அவர் முயற்சித்தார். அந்த நேரத்தில், விமான ஊழியர்கள் ஒரு துணியால் அவரை மூட முயன்றனர்.
ஆனால், அவர் நிர்வாணமாகவே ஓடிக்கொண்டே, நான் தரையிறங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார்.
இதனை அடுத்து, விமானம் தரையிறங்கியவுடன் அந்த பெண்ணை காவலில் எடுத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரியவந்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 11:10 am
காதல் தோல்வியால் இளைஞர் சாலையில் படுத்துக்கொண்டு கதறி அழுதார்
March 12, 2025, 10:32 am
காதல் தோல்வி காரணமாக காதலியைக் கத்தியால் குத்திய ஆடவன்: காவல்துறையினரால் கைது
March 11, 2025, 3:46 pm
மார்ச் 16-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு
March 11, 2025, 9:55 am
உயிரற்ற பாம்பை ஸ்கிபிங் கயிற்றாகப் பயன்படுத்தி விளையாடிய சிறுவர்கள்
March 11, 2025, 9:32 am
ரமலான் முழுவதும் துபாய் மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்கும் RTA
March 10, 2025, 10:36 am