நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமிஞ்சை விளக்குக்கு அருகே விபத்து: இருவர் மரணம், மூவர் காயம்

சிரம்பான்:

சமிஞ்சை விளக்குக்கு அருகே நிகழ்ந்த விபத்தில் இருவர் மரணமடைந்த வேளையில் மூவர் காயமடைந்தனர்.

நேற்று இரவு இங்குள்ள மாதாஹரி ஹைட்ஸ் அருகே உள்ள சமிஞ்சை விளக்கு பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒரு கார் மீது மோதிய விபத்துக்குள்ளானது.

இரவு 8.30 மணியளவில் நடந்த சம்பவத்தில் மோடனாஸ் கிறிஸ் மோட்டாரின் பயணித்த 15, 16 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

முதல் கட்ட விசாரணையில் ஹோண்டா ஜேஸ் வகை கார் கட்டுப்பட்டை இழந்து சமிஞ்சை விளக்கு பகுதியில் நின்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்களை மோதி தள்ளியுள்ளது.

இதனால் கடுமையான காயங்களுக்கு இலக்கான மோட்டாரில் பயணித்தவர்கள் மரணமடைந்துள்ளனர்.

மேலும் காரில் பயணித்த இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஹட்டா சே டின் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset