நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகாராகூ பாடத் தெரியாததால் குடிநுழைவு அதிகாரியிடம் சிக்கிய சட்டவிரோத அந்நிய நாட்டினர்

பெட்டாலிங்ஜெயா:

நெகாராகூ பாடத் தெரியாததால் குடிநுழைவு அதிகாரியிடம் சட்டவிரோத அந்நிய நாட்டினர் ஒருவர் சிக்கிக் கொண்டார்.

பண்டார் சன்வேயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடிநுழைவுத் துறையின் அமலாக்க அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

இரவு 9 மணிக்குத் தொடங்கிய சோதனையில் 1,597  அந்நிய ந்நாட்டினரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது  ​​பல்வேறு குடியேற்றக் குற்றங்களுக்காக 597 சட்டவிரோத  அந்ந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இந்து 30 வயதுடைய ஆடவர் ஒருவர் அமலாக்க நடவடிக்கையின் போது உள்ளூரைச் சேர்ந்தவர் போல ஆள்மாறாட்டம் செய்தார்.

அப்போது அதிகாரிகள் அவரை நாட்டின் தேசிய கீதத்தை பாட சொன்னார்கள்.  ஆனால் அவர் நெகாராகூ பாடலைப் பாடத் தவறிவிட்டார்.

இதனால் அவரும் கைது செய்யப்பட்டார் என்று  குடிநுழைத் துறை துணை இயக்குநர் ஜாஃப்ரி எம்போக் தாஹா கூறினார்.

இந்த மெகா நடவடிக்கையில் 139 குடிநுழைவுத் துறை அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

மேலும் பொது செயல்பாட்டுப் படையின் 200 உறுப்பினர்கள், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் 40 உறுப்பினர்கள், தேசிய பதிவுத் துறையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள், சிவில் பாதுகாப்புப் படையின் ஐந்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset