நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தம்பின் போலிஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்ட அறை தீ விபத்தில் எரிந்து நாசமானது

தம்பின்:

தம்பின் மாவட்ட காவல் தலைமையகத்தில் உள்ள போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு நிர்வாகக் கட்டிடத்தின் கூட்ட அறை நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது.

இரவு 7.15 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதனை தம்பின் மாவட்ட போலிஸ் தலைவர் அமிருதியன் சரிமான் உறுதிப்படுத்தினார்.

தம்பின் போலிஸ் நிலையத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை போக்குவரத்து விசாரணை அலுவலக உறுப்பினர்கள் கவனித்துடன், அவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையைத் தொடர்பு கொண்டனர்.

இரவு 7.21 மணிக்கு, தீயணைப்பு படையினர் வந்தனர். இரவு 8.10 மணிக்கு தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவம் நடந்த நேரத்தில், அலுவலகத்தில் பணியில் யாரும் இல்லை. தீயணைப்பு படையினர் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீயில் முற்றிலுமாக அழிந்த அலுவலகம் ஒரு கூட்ட அறை என்று அவர் விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset