நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் அஜித்குமாரின் GOOD BAD UGLY படத்தின் டீசர்: மக்களைக் கவர்ந்து வருகிறது 

சென்னை: 

நடிகர் அஜித்குமாரின் 63ஆவது திரைப்படமான GOOD BAD UGLY திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது 

இந்நிலையில் படத்தின் டீசர் கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியானது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கியுள்ளார் 

GOOD BAD UGLY டீசர் வெளியானதுடன் தற்போது வரை 3 கோடியே 4 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது YOUTUBE TRENDING இல் உள்ளது 

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் படத்தின் BGM ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது 

GOOD BAD UGLY படத்தில் நடிகர் அஜித்குமாருடன் நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் தாஸ், எஸ்.ஜே சூர்யா, பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர் 

படத்தின் டீசர் வெறித்தனமாக உள்ளதால் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்கம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும் என்று நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர் 

மேலும், ஏப்ரல் 10ஆம் தேதி எந்த திரைப்படமும் எங்களுடன் போட்டிக்கு வரவேண்டாம் என்று அவர்கள் ஆராவார முழக்கங்களுடன் சொன்னார்கள்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset