நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LOVE INSURANCE COMPANY படத்தின் கதை இதுதானா ? சிந்து சமவெளி பார்ட் 2 என நெட்டிசன்கள் ட்ரோல் 

சென்னை: 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.

நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.

பதில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அதேபோல் பிரதீப்பின் தந்தை ரோலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்துள்ளார்.

அதன்படி ஹீரோ பிரதீப்பும் அவரது தந்தையாக நடிக்கும் சீமானும் ஒரே பெண்ணை காதலிப்பது தான் படத்தின் கருவாம். இது ஒரு டைம் டிராவல் பற்றிய படம் என்பதால் தந்தை மகன் இருவரும் டைம் டிராவல் மூலம் காலத்தை கடந்து பயணம் செய்து ஒரே பெண்ணை காதலிப்பார்கள் என்றும், அந்தப் பெண் ஒரு விபச்சாரி என்றும் கூறப்படுகிறது.

இப்படி ஒரு வில்லங்கமான கதையை தான் இயக்குநர் விக்னேஷ் சிவன் எடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset