நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சிங்கப்பூரில் நடக்கும் லேடி காகா நிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டை வாங்க ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வரிசையில் காத்திருப்பு 

சிங்கப்பூர்:

அமெரிக்கப் பாடகியான லேடி காகா (Lady Gaga) இசைநிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டை வாங்க ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் காத்திருந்தனர்.

சிங்கப்பூரில் மே மாதம் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு இன்று (18 மார்ச்) முதல் நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.

Mastercard அட்டையைப் பயன்படுத்துவோர் குறிப்பாக இன்று நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.

இணையத்தளத்தில் காலை 10 மணிக்கு விற்பனைத் தொடங்கிய சற்று நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வரிசையில் இருந்தனர்.

நுழைவுச்சீட்டுகள் 140 வெள்ளி முதல் விற்பனையாகின்றன. ஆக விலையுயர்ந்த நுழைவுச்சீட்டுகளின் மதிப்பு 1,300 வெள்ளிக்கும் மேல்.

நுழைவுச்சீட்டுகளை வாங்கும் வாய்ப்பைப் பெற்ற சிலர் மறுவிற்பனையையும் தொடங்கிவிட்டனர்.

இணையவர்த்தகத் தளங்களில் VIP நுழைவுச்சீட்டுகள் 2,700 வெள்ளிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதைக் காணமுடிகிறது.

லேடி காகா மே மாதம் 18,19, 21, 24 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசிய அரங்கில் நிகழ்ச்சி நடத்துவார்.

ஆசியாவில் அவர் நிகழ்ச்சி நடத்தும் ஒரே இடம் சிங்கப்பூர் என்று மீடியா கோர்ப் ஊடகம் தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டவரும் நுழைவுச்சீட்டுகளை வாங்க முன்வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset