
செய்திகள் கலைகள்
லேடி காகா நிகழ்ச்சியினால் சிங்கப்பூரில் ஹோட்டல் அறைகளின் விலைகள் 60 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது
சிங்கப்பூர்
அமெரிக்கப் பாடகி லேடி காகா (Lady Gaga) இசைநிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை தொடங்கிய பிறகு சிங்கப்பூரிக் ஹோட்டல் அறைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஜப்பான், சீனாவைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மே மாதத்துக்காக அறைகளை இப்போதே முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டதாக ஹோட்டல் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதனால் ஹோட்டல் அறைகளின் விலை 30 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக 8World செய்தி தெரிவித்தது.
அந்த ஹோட்டல்களில் ஒன்று சிங்கப்பூர் அரங்கத்திலிருந்து 8 நிமிடத் தொலைவிலிருக்கும்Accor Hotels. லேடி காகாவின் இசைநிகழ்ச்சி அறிவிப்பு வெளியானதிலிருந்து ஹோட்டல் அறைகளை அதிகமானோர் தேடிவருவதாக அது கூறியது.
லேடி காகாவின் இசைநிகழ்ச்சி மே 18 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளான மே 18ஆம் தேதிக்கான ஹோட்டல் அறையின் விலை சுமார் 300 வெள்ளி. அது அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் 60 விழுக்காடு அதிகம்.
ஆதாரம்: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 7:59 pm
தெலங்கானாவுக்கு ரூ.50 லட்சம் வெள்ள நிவாரண நிதி: நடிகர் பாலகிருஷ்ணா அறிவிப்பு
August 30, 2025, 7:26 pm
என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் போலிசில் புகார்
August 30, 2025, 12:43 am
மது போதையில் தகராறு: நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன்
August 28, 2025, 6:49 pm
மகள் அப்பாவை தோடும் பேஜம் திரைப்படம்; செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியீடு காண்கிறது: எஸ்டி பாலா
August 27, 2025, 5:39 pm
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
August 27, 2025, 12:38 pm
கார்த்தியின் கைதி திரைப்படம் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது
August 25, 2025, 12:41 am
‘மதராஸி’ ஏ.ஆர்.முருகதாஸின் மற்றொரு ‘கஜினியா’?
August 22, 2025, 7:19 pm
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
August 20, 2025, 1:07 pm