நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மனோஜ் பாரதிராஜா மறைவு: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி

சென்னை:

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் பிரபல நடிகருமான மனோஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 48.

தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் மனோஜ் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவர்  கடல் பூக்கள், சமுத்திரம், அல்லி அர்ஜூனா, விருமன், மாநாடு, ஈரநிலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார.

மேலும் 2023ஆம் ஆண்டில் பாரதிராஜா, சுசீந்திரன் உட்பட புதுமுகங்களை வைத்து மார்கழி திங்கள் என்னும் படத்தை இயக்கி உள்ளார். 

இந்நிலையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்கு பின்  ஓய்வில் இருந்த அவர் உயிரிழந்துள்ளார்.

குறிப்பாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,

திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவரின் மறைவு தமிழ் திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset