நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

97-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 5 விருதுகளை அனோரா திரைப்படம் வென்றது

லாஸ் ஏஞ்சல்ஸ்:

97-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 5 விருதுகளை அனோரா திரைப்படம் வென்றது. 

இப்படத்தின் இயக்குநர் தனக்கு கிடைத்த விருதை பாலியல் தொழிலாளுகளுக்கு அர்ப்பணித்தார்.

பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றிய திரைப்படமான அனோரா, ஷான் பேக்கர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தில் மார்க் எடேல்டின், யுரிய் போரிசவ், லுனா சோவியா மரிடானா , கரேன் கராகுலியன், வச்சே டோவ்மாஸ்யன், அலெக்ஸி செரிப்ரியாகோவ் ஆகியோர் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இத்திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் என ஆறு பிரிவுகளில் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்றது.

இதில், இத்திரைப்படம் சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த எடிட்டிங் ஆகிய இரண்டு விருதுகளை ஷான் பேக்கர் பெற்றார். 

மேலும், சிறந்த துணை நடிகருக்கான விருதை யூரா போரிசோவும், சிறந்த நடிகை விருதை மைக்கி மேடிசன், மேலும் அனோரா சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset