
செய்திகள் உலகம்
வேலையை இலகுபடுத்த இலஞ்சம் கொடுக்க வேண்டாம்: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி
கொழும்பு:
தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்காலத்தில் புதிய டிஜிட்டல் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தொழில், தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக தொழில் வழங்குனர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குள் இருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்துக்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டார்.
இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதனைத் தெரிவித்தார்.
“தொழிற்சாலைகள் கிராமங்களில் இருக்குமானால், தொழில்துறை அமைச்சு மக்களுக்கு சேவைகளை வழங்கும் இடமாக இருந்தால், அந்த சேவைகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் வழங்கப்பட வேண்டும்.
பின்னர் தொழில் வழங்குனர்கள் கொழும்புக்கு வந்து அதற்காகப் போராட வேண்டியதில்லை. எங்கள் எதிர்கால திட்டம் நவீனமயமாக்கப்பட்டு தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவுடன், தொழிற்சாலையிலேயே பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
ஒருவர் தொழில் தொடங்க அனுமதி பெற ஒன்றரை வருடம் மட்டுமே ஆகும். இல்லையெனில், இலஞ்சம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகிறது.
இலஞ்சம் வழங்காமல் இருப்பதற்காகவே அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இலஞ்சம் வழங்காமல் ஊழலற்ற முறையில் செயற்பட வேண்டியது அவசியம்.
இதை மேலும் மேம்படுத்த, அனைத்து அரச கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே உங்கள் வேலையை எளிதாக்குவதற்காக தொழில்முனைவோரிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, வேலையை இலகுபடுத்த இலஞ்சம் கொடுக்க வேண்டாம்.”
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:47 pm
விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி.யை மடக்கிப் பிடித்த விமானச் சிப்பந்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm