நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து யாலாவில் வெடிக்குண்டு வெடித்தது: 7 போலிசார் உட்பட 23 பேர் காயம்

யாலா:

தாய்லாந்து யாலாவில் வெடிக்குண்டு வெடித்ததில் 7 போலிசார் உட்பட 23 பேர் காயமடைந்தனர்.

பன்னாங் சாட்டா போலிஸ் தலைவர்,  ரானோன் சுராவிட் இதனை தெரிவித்தார்.

யாலா மாநிலத்தின் பன்னாங் சாடா மாவட்டத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி அருகே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 8.20 மணிக்கு நடந்தது.

அதிகாரிகளை குறிவைத்து ஆயுதமேந்திய குழுவால் இது நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில் போலிஸ்  அதிகாரிகள் இரண்டு வாகனங்களில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். 

போலிஸ் வாகனம் பல்பொருள் அங்காடிக்கு வந்தபோது, ​​அருகிலுள்ள பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டு திடீரென வெடித்தது.

அது ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஏழு போலிஸ் அதிகாரிகள், 16 பொதுமக்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக பன்னாங் சாதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது தொடர்பில் போலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset