நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவிலிருந்து புதுடெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ரோம்: 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

இந்த விமானத்தில் 199 பயணிகள், 15 ஊழியர்கள் என மொத்தம் 214 பேர் பயணித்தனர்.

துர்க்மேனிஸ்தான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

இதனால், இத்தாலிக்கு விமானம் திருப்பி விடப்பட்டது.

இத்தாலி விமானப்படையின் போர் விமானங்கள் பாதுகாப்புடன் பயணிகள் விமானம் ரோம் நகரில் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து,விமானத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பதும் உறுதியானது. இதையடுத்து, விமானம் மீண்டும் டெல்லிக்குப் புறப்படவுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset