நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க ராணுவத் தலைவரையும் 5 அதிகாரிகளையும் அதிரடியாக பதவிநீக்கம் செய்தார் ட்ரம்ப் 

வாஷிங்டன் டி சி:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்க ராணுவத்தின் தலைவர் CQ பிரவுனையும் (Brown) 5 அதிகாரிகளையும் பதவிநீக்கம் செய்திருக்கிறார்.

முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் (Lieutenant General) டேன் ரஸின் கேன் (Dan "Razin" Caine) ராணுவத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று Truth Social சமூக ஊடகத்தில் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

செனட் சபை புதியவரை உறுதிசெய்வதற்கு முன்னரே பிரவுன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

முதல்முறையாக ஓய்வுபெற்ற அதிகாரியொருவர் அமெரிக்க ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

அமெரிக்கக் கடற்படையின் தலைவி, ஆகயப்படையின் துணைத்தலைவர், ராணுவம், கடற்படை, ஆகாயப்படைகளின் நீதிபதிகள் அனைவரும் பதவிநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset