
செய்திகள் உலகம்
மாலத் தீவை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க இலங்கையிடமிருந்து பாடம் கற்கின்றோம்
கொழும்பு:
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலத் தீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு நேற்று இலங்கை அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றி தொடர்பில் மாலத் தீவு குடியரசின் வாழ்த்துக்களைத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர், தேர்தல் வெற்றிக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவிற்குப் பிறகு, வலுவான நாடாக எழுச்சியடைந்து வருவது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், மாலைதீவை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பதாகவும் அப்துல்லா கலீல் சுட்டிக்காட்டினார்.
மாலத் தீவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சர், இதன் போது ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் மாலைதீவு ஆற்றிவரும் மகத்தான பங்களிப்பிற்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.
மாலத் தீவு குடியரசின் உயர் ஸ்தானிகர் மசூத் இமாத் (Masood Imad),வெளியுறவு செயலாளர் பாத்திமத் இனாயா (Fathimath Inaya), அமீனாத் அப்துல்லா தீதி (Aminath Abdulla didi) உள்ளிட்ட விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:47 pm
விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி.யை மடக்கிப் பிடித்த விமானச் சிப்பந்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm