
செய்திகள் மலேசியா
மிசி திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு ட்ரோன் பராமரிப்பு, பழுதுபார்க்கும் திறன் பயிற்சிகள்
பிறை:
மிசி திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு ட்ரோன் பராமரிப்பு, பழுதுபார்க்கும் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மனிதவள அமைச்சு, எச்ஆர்டி கோர்ப், மித்ரா கூட்டமைப்பில் உருவானது தான் மிசி எனப்படும் மலேசிய இந்திய இளைஞரகள் திறன் பயற்சி திட்டங்களாகும்.
திறமையான தொழிலாளர்களுக்கான தேவைக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் வேளாண்மை, ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற அதிக தேவை உள்ள துறைகளில் பதிவு செய்ய 6,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை வெற்றிகரமாக இத் திட்டம் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ட்ரோன் பராமரிப்பு, பழுதுபார்க்கும் திறன் திட்டத்தின் மூலம் இந்திய இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பினாங்கு பிறை தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 16 முதல் 20 வரை இப்பயிற்சிகள் நடைபெற்றது.
இந்தப் பயிற்சி வேகமாக வளர்ந்து வரும் ட்ரோன் துறையில் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளுக்கு பங்கேற்பாளர்களைத் தயார்படுத்துவதன் மூலம் தொழில் இடைவெளியை குறைப்பதை இலக்காக கொண்டிருந்தது.
மேலும் சிறப்பு ட்ரோன் பயிற்சிக்கான வளர்ந்து வரும் தேவையை நிரூபித்ததுடன்,
எதிர்கால வாழ்க்கைக்காக மலேசியாவில் இந்திய திறமையாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் நிரூபித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட ஐந்து நாள் (40 மணிநேர) பயிற்சி, பங்கேற்பாளர்களுக்கு சுயமாக ட்ரோன்களின் பழுது, பராமரிப்பு, செயல்பாட்டில் நேரடி அனுபவத்தை தந்தது.
இது உலகளாவிய தொழில்துறை பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்துள்ளது.
இது போன்ற பயிற்சிகள் பணியாளர்களை புதுமைகளில் முன்னணியில் இருக்க உத்தரவாதத்தை அளிக்கிறது.
ட்ரோன் தொழில்நுட்பம் பல்வேறு தொழில்களின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறது.
மேலும் விவசாயத் துறையில் ட்ரோன்களின் பயன்பாடு பரவலாக அதிகரித்து வருகிறது.
இந்த சான்றிதழ் எனக்கு வேலை கிடைப்பதில் ஒரு நன்மையை அளிக்கிறது என்று பங்கேற்பாளர்களில் ஒருவரான 20 வயது ஆர். நரேந்திரா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 9:41 pm
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹ்ருடின் காலமானார்
February 22, 2025, 5:45 pm
உருட்டல் மிரட்டலுக்கு அறவாரியமும் பேராக் மாநில அரசும் அடிபணியாது: சிவநேசன்
February 22, 2025, 5:40 pm
19ஆவது இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2025 அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது
February 22, 2025, 3:16 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் சுழல் கிண்ணத்தில் மீபாவின் இளையோர் கால்பந்து போட்டி
February 22, 2025, 3:05 pm
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
February 22, 2025, 3:03 pm
வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்வார் பொய் சொல்கிறார்: துன் மகாதீர்
February 22, 2025, 3:01 pm