நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உருட்டல் மிரட்டலுக்கு அறவாரியமும் பேராக் மாநில அரசும் அடிபணியாது: சிவநேசன்

ஈப்போ: 

பேராக் மாநிலத்தின் 2 ஆயிரம் ஏக்கர் கல்வித்தோட்டத்தின் பட்டாவில் பேராக் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டு அறவாரியத்திற்கு சொந்தமானது என்றும் பேராக் மாநில அரசாங்கம் இந்த கல்வித்தோட்டத்தை யாரும் குத்தகை விடவோ அல்லது விற்கவோ முடியாது என்பதற்காக "கேவிட்" போடப்பட்டுள்ளது என்றும் பேராக் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி்ப் புத்தகம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது பேராக் இந்திய சமூகநலத்துறை, மனிதவளம், சுகாதாரம் மற்றும் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

அறவாரியத்தின் சட்டவிதிமுறைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆய்வு செய்வது அவசியமாகும். ஒரு கட்சியின் 24 தொகுதித்தலைவர்கள் மற்றும் மாநில தலைவர் துணைத்தலைவர் இயக்குநராக இடம் வழங்க வாய்பளிக்க வேண்டும் என்று கூறுவது சிந்தனைக்கு எட்டடாத செயலாகும்.

எழுத்துப்பூர்வமாக இது எழுதப்படாத விதிமுறைகளாகும். இந்த அறவாரியத்தின் விவகாரங்களில் விசயம் தெரியாமல் மூக்கை நிலைக்கு வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடலாம். இந்த 2 ஆயிரம் ஏக்கர் கல்வித்தோட்டம் பேராக் மாநில இந்திய மாணவர்களின் சொத்துடைமை என்பதனை உணர்ந்து பேசவும்.

அத்துடன் பேராக்கிலுள்ள அனைத்து இந்தியர்களின் சொத்தாக இந்த கல்வித்தோட்டம் திகழ்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது அறவாரியத்தின் இயக்குநர்கள் சிறப்பாக சிந்தித்து செம்மையாக செயல்படுகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளில் பி40 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி உதவினர். ஆனால் இவ்வாண்டில் பள்ளி தவணை தொடங்கியபோது அனைத்து தமிழ்ப்பப்ளி மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வழங்கி உதவினர் என்று தம் பாராட்டை அவர் தெரிவித்துக்கொண்டார்.

தேசிய நில நிதி கூட்டறவு கழகத்தின் உதவியால் இந்த 2 ஆயிரம் நிலத்தில் பயிரிட்டு அதன் வருமானத்தை மாணவர்களின் கல்விக்கு அறவாரியம் உதவி வருகிறது.

எந்தவொரு உருட்டல் மிரட்டலுக்கு பேராக் அரசாங்கம் பயப்படபோவதில்லை. பேராக் மாநில அரசும், ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இந்த அறவாரியத்திற்கு உதவ முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது பேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு சில காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக, பள்ளி இடமாற்றம் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு செயல்பட ஒரு செயற்குழு பேராக் மாநில அரசாங்கத்தால் உருவாகப்படவுள்ளது. இந்த செயற்குழுவின் தலைவராக பேராக் மேனாள் கல்வி தினைக்கள மழலையர் பள்ளி, தொடக்க பள்ளிக்கான உதவி இயக்குநர் மு.அர்ஜுணன் பொறுப்பேற்கவுள்ளார் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் அறிவிப்பு செய்தார்.

இந்நிகழ்வில், சில ம இ கா தொகுதித்தலைவர்கள்,இயக்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர். அவர்களுடன் 75 தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். அறவாரியத்தின் தலைவர் ச.முனியாண்டி உட்பட ஏழு இயக்குநர்களும் கலந்து சிறப்பித்தனர்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset