
செய்திகள் மலேசியா
19ஆவது இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2025 அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது
கோலாலம்பூர்:
பள்ளி மாணவர்கள் அறிவியல்சார் திறன்களைக் கற்றுக் கொள்ளவும் வளர்த்து கொள்ளவும் வழிவகுக்கும் வகையில் ASTI எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா வெற்றிக்கரமாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில் இவ்வாண்டு ASTI இயக்கத்தின் பிரம்மாண்டமான ஏற்பாட்டில் 19ஆவது இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2025 இன்று தொடக்கம் கண்டது இந்த தொடக்க விழாவில் ASTI இயக்கத்தின் ஆலோசகரும் முன்னாள் கல்வி துணையமைச்சருமான டத்தோ பி.கமலநாதன், ASTI அமைப்பின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் முஹம்மத் யூனுஸ், மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் எஸ் எஸ் பாண்டியன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் இப்போட்டியானது பள்ளி அளவிலான அறிவியல் விழா (SLSF), மாநில அளவிலான அறிவியல் விழா (NSFYC) மற்றும் தேசிய அளவிலான அறிவியல் விழா (NSFYC) என்ற மூன்று நிலைகளில் நடத்தப்படவுள்ளது
இவ்வாண்டுக்கான பள்ளி அளவிலான அறிவியல் விழா (SLSF) வரும் மார்ச் மாதம் தொடங்கப்படும். மாநில அளவிலான அறிவியல் விழா எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கப்படும் வேளையில் தேசிய அளவிலான அறிவியல் விழா 2025 ஆனது, நடுவர் குழுவால் முடிவு செய்யப்படும்.
அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் அறிவியல் விழா 2025இல் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றன. அறிவியல் விழாவை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அறிவியல் விழா மற்றும் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கத்தின் முகநூல் அல்லது www.nsfyc.org.my எனும் இணையத்தளத்தை வலம் வரலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 9:41 pm
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹ்ருடின் காலமானார்
February 22, 2025, 5:45 pm
உருட்டல் மிரட்டலுக்கு அறவாரியமும் பேராக் மாநில அரசும் அடிபணியாது: சிவநேசன்
February 22, 2025, 3:16 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் சுழல் கிண்ணத்தில் மீபாவின் இளையோர் கால்பந்து போட்டி
February 22, 2025, 3:05 pm
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
February 22, 2025, 3:03 pm
வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்வார் பொய் சொல்கிறார்: துன் மகாதீர்
February 22, 2025, 3:01 pm