நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய மாணவர்களை 17 வயதில் தேசிய, மாநில கால்பந்து வீரர்களாக உருவாக்குவதே மீபா பியோண்ட் பயிற்சித் திட்டத்தின் முதன்மை இலக்கு: அன்பா

கோலாலம்பூர்:

இந்திய மாணவர்களை 17 வயதில் தேசிய, மாநில கால்பந்து வீரர்களாக உருவாக்குவதே மீபா பியோண்ட் பயிற்சித் திட்டத்தின் முதன்மை இலக்காகும்.

மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் அன்பானந்தன் கூறினார்.

12 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியை மீபா வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

குறிப்பாக அதிமான பெண் விளையாட்டாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியை தொடர்ந்து பியோண்ட் திட்டத்தை மீபா மீண்டும் தொடங்கவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் முறையான பயிற்சிகளை தரமான விளையாட்டாளர்களை உருவாக்குவது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

டாக்டர் அண்ணாதுரை, செயலாளர் கமலேஷ் தலைமையில் நான்கு ஜூன்களில் இப்பயிற்சிகள் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து 100 பேரை கொண்டு தேசிய பயிற்சி திட்டம் நடத்தப்படும்.

இப்பயிற்சியின் வாயிலாக தரமான கால்பந்து வீரர்களை உருவாக்குவது தான் இதன் முதன்மை நோக்கமாகும்.

குறிப்பாக இந்திய மாணவர்களை 17 வயதில் தேசிய, மாநில வீரர்களாக விளையாட வேண்டும்.

இதுவே மீபா பியோண்ட் திட்டத்தின் முதன்மை இலக்காகும் என்று அதன் பயிற்றுநர்களுக்கான சிறப்புக் கூட்டத்திற்கு பின் அன்பானந்தன் இதனை கூறினார்.

மீபாவின் துணைத் தலைவர் ஏஎஸ்பி ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset