நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனது வீட்டில் மயங்கி விழுந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று அதிகாலை டாமன்சாராவில் உள்ள தனது வீட்டில் சரிந்து விழுந்ததால் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரது மகன் நஷ்ரிக் இதனை உறுதிப்படுத்தினார்.

அதிகாலை 2.30 மணியளவில் 65 வயதான டத்தோஸ்ரீ  இஸ்மாயில் சமையலறைக்கு நடந்து செல்லும்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

நாங்கள் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது, ​​என் தந்தை உணவு எடுக்க எழுந்தார்.

நடக்கத் தொடங்கிய போது அவர் நிலையற்றவராகத் தோன்றினார்.

பின்னர் திடீரென மயங்கி விழுந்தார்  என்று நஷ்ரிக் தெரிவித்தார்.

அவர் சிறிது நேரத்திலேயே சுயநினைவு திரும்பினார். ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தார்.

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.

உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

மேலும் இல்ஸ்மாயிலுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவதை நஷ்ரிக் மறுத்தார்.

என் தந்தை இப்போது மிகவும் சீராக இருக்கிறார். அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset