
செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மாநிலத்தில் உள்ள சுமார் 71 தமிழ் பள்ளிகளில் பயிலும் 2013 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இலவச கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன.
பள்ளியின் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், சுமார் 186 முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பென்சில், எழுத்துப் புத்தகங்கள், வரைகோல் உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பள்ளிக்கு முதன் முதலாகச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு வழங்கப்பட்ட எழுது பொருட்கள் அவர்களின் கல்விப் பயணத்திற்குத் தொடக்கமாக மட்டும் இல்லாமல் எதிர்காலத்தில் அவர்கள் சிறப்பாகக் கல்வியில் முன்னேற உறுதுணையாக இருக்கும் என்று ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை சு. தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பங்களிப்பு செய்த அனைத்து நற்பணியாளர்களுக்கும் இன்றைய நிகழ்வின் வெற்றிக்குத் துணைநின்ற துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் பள்ளி நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இதனிடையே ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி , சுல்தானா ரொஹாயா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ சுகுமாறன் இராமன், ஜொகூர் மாநில பாலர் பள்ளிகள், ஆரம்பப்ள்ளிகளுக்கான உதவி இயக்குநரும் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் இரா. இரவிச்சந்திரன், ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், இஸ்கண்டார் புத்திரி மாநகர் உறுப்பினர் வெ. சங்கரபாண்டியன், ஜொகூர் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் சுற்றுவட்டார மஇகா தலைவர்கள் ஆகியோர் இணைந்து இப்பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 9:41 pm
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹ்ருடின் காலமானார்
February 22, 2025, 5:45 pm
உருட்டல் மிரட்டலுக்கு அறவாரியமும் பேராக் மாநில அரசும் அடிபணியாது: சிவநேசன்
February 22, 2025, 5:40 pm
19ஆவது இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2025 அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது
February 22, 2025, 3:16 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் சுழல் கிண்ணத்தில் மீபாவின் இளையோர் கால்பந்து போட்டி
February 22, 2025, 3:03 pm
வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்வார் பொய் சொல்கிறார்: துன் மகாதீர்
February 22, 2025, 3:01 pm