
செய்திகள் மலேசியா
கோழிக் குஞ்சுகள் விரைவிலேயே பருமனமாவதற்கு தரப்படும் நுண்ணுயிர் தடை செய்யப்பட வேண்டும்: பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் வேண்டுகோள்
பினாங்கு:
கோழி பண்ணையாளர்கள் கோழிக் குஞ்சுகள் சீக்கிரமாக வளர வேண்டும், பருமனாக வேண்டும் என்பதற்காக தரப்படுகின்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முஹைதீன் அப்துல் காதற் சுகாதார அமைச்சை கேட்டுகொண்டுள்ளார்.
இந்த தடையை மிக விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டில் ஒரு மலேசிரியர் ஆண்டிற்கு சராசரி 50.5 கிலோ கிராம் எடை கொண்ட கோழி இறைச்சியை உண்பதாகவும் இதனால் மலேசியா உலகளவில் கோழி இறைச்சியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக விளங்கியது என்றார் முஹைதீன்.
தரவுகளின்படி மலேசியா இப்போது தென்கிழக்கு ஆசியாவில் தனிநபருக்கான கோழி இறைச்சி நுகர்வில் முன்னணியில் உள்ளது.
இருப்பினும், கோழிகளுக்கான இந்த அதிக தேவை கால்நடைத் தொழிலில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பரவலான பயன்பாடு குறித்து குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளது.
பல ஆண்டுகளாக, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நடத்திய ஆய்வுகளில் மலேசிய பண்ணைகளில் பரவலான நுண்ணுயிர் எதிர்ப்பு பயன்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முதன்மையாக கோழிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் கொழுப்பை அதிகரிப்பதற்கும் இந்த அபாயகரமான நுண்ணுயிர் எதிர்ப்பு பயன்படுத்தப்படுகிறது.
செபராங் பிறை, கெடாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் விலங்கு தீவனத்தை விற்கும் கடைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கிடைப்பது கண்டறியப்பட்டது. விற்பனையாளர்கள் குஞ்சுகளுக்கு வளர்ச்சி ஊக்கிகளாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கொடுக்கின்றனர்.
இந்த ரசாயன நுண்ணுயிர்கள் கால்நடை சேவைகள் துறையால் தடைசெய்யப்பட்ட போதிலும், எரித்ரோமைசின் என்ற ஒரு பிரபலமான மருந்து முக்கிய தேர்வாக உள்ளது.
இது 20 கிராம் எடையுள்ள ஒரு பாக்கெட்டுக்கு சுமார் 5.00 ரிங்கிட்டிற்கு விற்கப்படுகிறது.
2021 முதல், விலங்கு தீவனத்தில் எரித்ரோமைசின், என்ரோஃப்ளோக்சசின், டைலோசின், செஃப்டியோஃபர், டெட்ராசைக்ளின் மற்றும் ஃபோஸ்ஃபோமைசின் ஆகிய ஆறு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கால்நடை இலாகா தடை செய்துள்ளது.
வளர்ச்சியை ஊக்குவிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தவறாகப் பயன்படுத்தப்படும்போது உணவுப் பாதுகாப்பு, பொது சுகாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன.
நம் நாட்டில் விலங்கு தீவனத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைத் தடை செய்ய வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியமும் பல நாடுகளும் விலங்கு தீவனத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மருத்துவம் அல்லாத பயன்பாட்டைத் தடை செய்துள்ளன.
ஆகவே கால்நடை இலாகாவால் தடைசெய்யப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மீதான தடையைப் கண்டிப்பாக நம் நாட்டுப் பண்ணைகளில் அமல்படுத்தப்பட வேண்டும்.
விலங்கு தீவனங்களில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும்
உணவு விலங்குகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு மற்றும் தவறாகப் பயன்படுத்துவதற்கான தேசிய கண்காணிப்பு அமைப்பை நிறுவும்படி பி.ப.சங்கம் கேட்டுக்கொள்கிறது.
அதே நேரத்தில் பயனீட்டாளர்கள் தாங்கள் உண்ணும் கோழி இறைச்சியை குறைக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 9:41 pm
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹ்ருடின் காலமானார்
February 22, 2025, 5:45 pm
உருட்டல் மிரட்டலுக்கு அறவாரியமும் பேராக் மாநில அரசும் அடிபணியாது: சிவநேசன்
February 22, 2025, 5:40 pm
19ஆவது இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2025 அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது
February 22, 2025, 3:16 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் சுழல் கிண்ணத்தில் மீபாவின் இளையோர் கால்பந்து போட்டி
February 22, 2025, 3:05 pm
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
February 22, 2025, 3:03 pm
வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்வார் பொய் சொல்கிறார்: துன் மகாதீர்
February 22, 2025, 3:01 pm