
செய்திகள் மலேசியா
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹ்ருடின் காலமானார்
தாப்பா:
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹ்ருடின் இன்று தனது 58ஆவது வயதில் காலமானார்.
இந்த விஷயத்தை தாப்பா அம்னோ இளைஞர் தலைவர் ஃபஹ்மி ஜாக்சி உறுதிப்படுத்தினார்.
முன்னதாக அவர் இன்று மாலை சுமார் 5.20 மணியளவில் அவர் திடீரென்று கீழே விழுந்து மயக்கமடைந்ததாக வடகிழக்கு பினாங்கு மாவட்ட போலிஸ் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.
பினாங்கு ஜார்ஜ்டவுன் சிட்டி அரங்கில் பினாங்கு முதலமைச்சர் கிண்ண நான்கு முனை கால்பந்து போட்டி நடைபெற்றது.
அப்போது மைதானத்தின் ஓரத்தில் மற்ற வீரர்களுடன் கைகுலுக்கும் போது அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அவருக்கு அவசர உதவிகள் வழங்கப்பட்டது.
அதன் பின்னர், அவர் மாலை சுமார் 5.40 மணியளவில் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பினாங்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மாலை 6.28 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பிறந்த இஷாம் ஷஹ்ருடின் ஒரு முன்னாள் கால்பந்து வீரர் ஆவார்
மேலும் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை பேரா அணிக்காக விளையாடியுள்ளார்.
1990ஆம் ஆண்டு பேரா மாநிலம் எப்ஏ கிண்ணத்தை வென்றபோது, அவர் அந்த அணியின் வீரர்களில் ஒருவராக இருந்தார்.
தாப்பா அம்னோ பிரிவுத் தலைவரான இஷாம், கடந்த பொதுத் தேர்தலில் ஆயர் கூனிங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 5:45 pm
உருட்டல் மிரட்டலுக்கு அறவாரியமும் பேராக் மாநில அரசும் அடிபணியாது: சிவநேசன்
February 22, 2025, 5:40 pm
19ஆவது இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2025 அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது
February 22, 2025, 3:16 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் சுழல் கிண்ணத்தில் மீபாவின் இளையோர் கால்பந்து போட்டி
February 22, 2025, 3:05 pm
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
February 22, 2025, 3:03 pm
வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்வார் பொய் சொல்கிறார்: துன் மகாதீர்
February 22, 2025, 3:01 pm