நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் சுழல் கிண்ணத்தில் மீபாவின் இளையோர் கால்பந்து போட்டி

கோலாலம்பூர்:

மீபா மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன்  சுழல் கிண்ண இளையோர் கால்பந்து போட்டி மிகப் பெரிய அளவில் நடத்தவுள்ளது.

மீபாவின் தலைவர் அன்பானந்தன் இதனை தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் மாதம் ஜொகூர் பாசிர் கூடாங்கில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சுழல் கிண்ண கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.

அதே சமயம் ஆகஸ்ட் மாதம் பேரா மாநிலத்தில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் டத்தோஸ்ரீ எம். சரவணன் சுழல் கிண்ணக் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.

மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்திற்கு பெரும் ஆதரவை வழங்கி வரும் இருவரின் பெயரில் கால்பந்து போட்டியை நடத்துவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

இவ்விரு போட்டிகள் மத்தியில் மகளிருக்கான கால்பந்து போட்டியும் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் கால்பந்து போட்டியில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து சிறப்பித்தனர்.

இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset