நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்வார் பொய் சொல்கிறார்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொய் சொல்கிறார்.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இதனை கூறினார்.

என்னை சந்திக்க விரும்பும் வெளிநாட்டுத் தலைவர்கள் தடை செய்ததை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மறுத்துள்ளார்.

அவர் அதை மறுக்கலாம், ஆனால் பொய் சொல்வதை நிறுத்துமாறு நான் அவருக்கு அறிவுறுத்துகிறேன்.

அவர் வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் பொய் சொல்பவர் என்று மக்கள் ஏற்கனவே அவரை முத்திரை குத்தியிருப்பது போதாதா என்று துன் மகாதீர் முகநூல் அறிக்கையில் கூறினார்.

அன்வார் தனது பொய்களை நிலைநிறுத்துவதற்காக குற்றச்சாட்டுகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.

நான் எப்போதும் விளக்குவது போல, என் பிள்ளைகளை வெளிநாட்டில் தொழில் செய்யச் சொன்னேன். 

நான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு தான் அவர்களுக்கு நாட்டில் தொழில் தொடங்கும்.

 நான் அன்வார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

 அவர் ஒரு பெட்டியைக் கூட (ஆதாரங்களைக் கொண்ட) காட்டவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset