நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவ சிகிச்சை நிறைவுபெற்று தாயகம் திரும்பினார் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார்

கோலாலம்பூர்:

கடந்த இரு வாரங்களாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வெளிநாட்டிற்குப் புறப்பட்டு சென்ற பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் சிகிச்சையை முடித்து விட்டு  இன்று காலை தாயகம் திரும்பினார்

இதனை சுல்தான் இப்ராஹிம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின் வாயிலாக தெரிவித்தார்

மாமன்னரை ஏற்றிச் சென்ற அரச மலேசிய விமான படையினர் இன்று காலை 7 மணியளவில் சுபாங் விமான நிலையத்தில் தரையிறங்கினர்.

பேரரசர் நலம் பெற வேண்டி அனைத்து மலேசியர்களும் மேற்கொண்ட பிரார்த்தனை தொடர்பாக அனைத்து மலேசியர்களுக்கும் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது நன்றியைத் தெரிவித்து கொண்டார்

முன்னதாக, கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி சுல்தான் இப்ராஹிம் தனது இரு புதல்வர்களுடன் வெளிநாட்டிற்கு சிகிச்சைகாக சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset